Friday, April 30, 2010

உச்சநீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு

குஷ்பூவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிபதி ஒருவர் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதில் தவறில்லை என்பது போல பேசி உள்ளார்.
இன்று மிகவும் பிரலமான பேச்சு என்னவென்றால் காலத்திற்கு ஏற்ப நாம் மாறனும் என்பதே. அதற்காக காலம் தொட்டே மாறாத நெறிகள் எல்லாம் மாறனுமா? மனசாட்சி என்ற ஒன்று இல்லையா ? அதனிடும் போய் கேளுங்கள் அது உங்களுக்கு அறிவிக்கும் திருமனத்திற்கு முன் உடலுறவு தவறு என்று. இன்று அவரவர் தங்களுக்கு என்று ஒரு நீதியை ஏன் எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே செய்வதினாலே இப்போது இந்த குழப்பம். ஒரு சில காரியங்களை தேவன் மனிதனுடைய அறியாமையின் நிமித்தம் மன்னிப்பார்.ஆனால்இந்த வகையான பாவங்கள் கே மற்றும் லெஸ்பியன் போன்ற பாவங்களுக்கு இட்டு செல்வதால் தேவ கோபாக்கினை இந்த பூமியின் மேல் சீக்கிரமாக கொண்டு வரும்.

Thursday, March 4, 2010

கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும்




யுரோப் தனது பதினைந்தாம் நூற்றாண்டில் ஒரு மிக பெரிய வரலாற்று நாயகனை உண்டாக்க போகிறது என்பதை தாமதமாக உணர்ந்தது.அது ப்ரோடஸ்தண்டை உருவாக்கிய மார்ட்டின்லூதர் அவர்கள் தான்.கர்த்தர் இவர் மூலமாக விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற சத்தியத்தை திரும்பவும் நிலைநாட்டினார்.நான் இந்த வரலாற்று படத்தை சில தினங்களக்கு முன் பார்த்தேன் அதில் ஒரு நிகழ்வில் மார்டின் லூதரின் குரு அவர்கள் பல மரித்த பரிசுத்தவான்களின் உடமைகளையும் அவர்களின் சிலைகளையும் கண்பித்து இவைகளின் மூலம் ஒருவர் தேவபக்தியை பெருக்கலாம் என்று சொல்லுவார்.அதற்க்கு மார்டின்லூதர் இல்லை என்று மறுப்பார்.குரு கோபம் அடைந்தவராய் ,இவைகளின் மூலம் (சிலைகள் )ஒருவன் தேவபக்தியை அடைய முடியாவிட்டால் வேறு எதினால் அடையமுடியும் என்று கேட்பார்.அதற்கு மார்டின்லுதர் கிறிஸ்துவே என்று ஆணித்தரமாக வாதிடுவார்.


என்ன இவன் கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும் என்று தலைப்பை வைத்து மார்டின் லூதர் பற்றி ஏதோ எழுதுகிறாரே என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் ஆண்டவர், மார்டின் மூலமாக திரும்பவும் நிலைநாட்டிய சத்தியம்(விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்) தான் இன்று கிருத்தவம் மற்ற மார்கங்களிருந்து வேறுபடுகிறது என்று சொல்ல விரும்புகிறேன்.


மற்ற மார்க்கங்களிருந்து கிருத்துவம் எப்படி வேறுபடுகின்றது?
*கிருபையும் கிரியையும்
பிற மார்க்கங்களில் கிரியையினால் மோட்சம் அடையலாம் என்று அந்த மார்க்கங்களின் உபதேசியார் சொல்லுவதை நாம் பல முறை கேட்டிருக்கலாம்.அதாவது நாம் தானம் தர்மம் செய்வதினாலும் நாம் உடலை பலவித கட்டுபாட்டில் ஈடு படுத்துவதினாலும் மோட்சம் அல்லது பரலோகம் செல்லலாம் என்கின்றனர்.ஆனால் அடிப்படையான ஒரு உண்மையை அறியாமல் உள்ளனர்.அது எதுவெனில் நல்ல மரம் நல்ல கனியை தானாக தருகின்றது விஷமரம் விஷ கனிகளை தருகின்றது.நாம் நல்ல மரமென்றால்
நல்ல கனிகள் மாத்திரம் வர வேண்டுமே தவிர நல்லது அல்லாதவைகள் எப்படி வருகிறது என்ற கேள்வி எழும்புகிறது.ஆதாம் விழுகையினாலே தான் நாம் எல்லாரும் இந்த பாவ சரீரத்தினால் அவதிபடுகிறோம் என்று பைபிள் காண்பிக்கிறது.அதினால் தான் பவுலும் ரோமர் ஏழாம் அதிகாரத்தில் பின்வருமாறு எழுதுகிறார்

நன்மை செய்யும் விருப்பம் எனக்கு இருந்தாலும் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை என்றும் பாவ சரீரத்தில் உள்ள பாவ பிரமாணம் என்னை அடிமைபடுத்துகின்றது என்றும் சொல்கிறார்.

மற்ற மார்க்கங்களில் இந்த பாவ சுபாவத்தை பற்றி அதிகம் பேச மாட்டார்கள் நம்மால் நல்லது செய்ய முடியம் அதினால் நாம் பரலோகம் செல்லலாம் என்று போதிப்பர்.ஆனால் அந்த நல்லதிலும் ஒரு சுய நலம் உண்டு என்றும் கரைகள் ஏராளம் என்பதை பார்க்க அவர்களால் முடிவதில்லை.ஏனெனில் இந்த உலகத்தின் அதிபதியானவன் அவர்கள் மனக்கண்களை குருடாக்கி உள்ளான்.
இந்த பாவ சுபாவத்தை குறித்து பைபிளின் சில வசனங்களை பார்ப்போம்.
யோபு பதினான்காம் அதிகாரத்தில் நான்காம் வசனம்
அசுத்தமானதிளிருந்து சுத்தமானது பிறப்பிக்கிறவன் உண்டோ?
யோபு பதினைந்து அதிகாரம் பதினான்காம் வசனம்
மனுஷனானவன் பரிசுத்தமாக இருப்பதும் பெண்ணிடம் பிறந்தவன் நீதிமானா இருப்பதும் எப்படி?

இன்னும் பல வசனங்கள் பைபிளில் உண்டு.இப்படி நாம் வசனங்கள் மூலமாகவும் நாம் சுய அனுபவத்திலும் மனுஷன் பிறப்பில் இருந்தே கரை உள்ளவன் என்பதை அறிகிறோம்.இவைகள் மற்ற மார்க்கங்களில் சொல்லபடவில்லை.

இன்றும் பல கிருத்துவர்கள் கூட நம்முடைய பாவ சுபாவத்தை மறந்து பைபிளை படிப்பதினாலும் சபைக்கு தவறாமல் செல்லுவதினாலும் தசமபாகம் கொடுக்கிரதினாலும் தானம் தர்மம் பன்னுவதினாலும் பரலோகம் அடையலாம் என்று எண்ணுகின்றனர் மாறாக இந்த நற்கிரியைகல்லாம் செய்வதற்கு ஆதி முதல் தேவன் நம்மை உண்டாக்கினார் என்றும் இந்த நற்கிரியைகளில் நடப்பதற்கு அவைகள் முன்னதாகவே ஆயத்தம் செய்யப்பட்டது என்றும் இவைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால்(கிருபையினால் ) வருகின்ற பலன்கள் என்பதை அறியாமல் உள்ளனர்.




Wednesday, February 24, 2010

டைம் சேஞ்சர் - கிறிஸ்டியனின் கண்ணோட்டம்




வேதத்தை ஆதாரமாக வைக்காமல் செயல்படும் நீதிகள் எல்லாம் கால போக்கில் மாறிவிடும் ஆபாயத்தை உணர்த்துகிறது இப்படம் . இந்த படத்தை பற்றி நான் யோசிக்கையில் சிறு குழந்தைகளை எப்படி தேவவார்த்தையின் அடிப்படையில் வளர்க்க வேண்டும் என்று என்னுடைய சபையில் சொல்லி கொடுத்தது ஞாபகம் வருகிறது.அதாவது அவைகள் செய்யும் தவறுகளை நாம் வெறுமனே சுட்டி காட்டாமல் அத்தவறுகளை ஏன் செயகூடாது என்றும் சொல்லவேண்டும் என்று போத்திக்கபட்டேன். உதாரணத்திற்கு பொய் சொல்லும் போது அதை ஏன் தவறு என்று பத்து கட்டளைகள் மூலம் சுட்டி காட்டவேண்டும். இல்லை என்றால் இன்று அமெரிக்காவில் உள்ள மக்களை போன்று உனக்கு எது சரி என்று தெரிகிறதோ அதை செய் என்ற கோட்பாடு சீக்கிரமே வந்துவிடும்.
ஒரு காலத்தில் திருமணம் செய்வதற்கு முன் ஆண் பெண் பழக கூடாது என்ற சொல்லபடாத சட்டம் நாம் இருதயத்தில் சமயங்களின் முலமாக இருந்தது. அதுவும் சமுதாயத்தின் அழுத்ததினால் காதல் செய்வது மிகவும் தவறாக கருதபட்டது. ஆனால் இப்போது அது ஒரு தவறில்லை என்ற அளவுக்கு போய்விட்டது.நான் காதல் திருமணத்திற்கு எதிர்ரனாவன் இல்லை.ஆனால் அதை தேவ வார்த்தை அங்கிகரிக்கிறதா என்று பார்க்க வேண்டும். இல்லை என்றால் நாளடைவில் ஒருவர் பல பேரை காதல் செய்யும் நிலைக்கு சென்று வேரங்கோ சென்று விடும்.
சக கிருஸ்துவர்களே நம் முன்னோடிகள் நமக்கு கொடுக்கபட்ட விளக்கின் ஒளியை நம் பின்வரும் சந்ததிக்கு கொடுக்க கடமை பட்டவர்களாக உள்ளோம்.
கிறிஸ்டியன்

Monday, February 22, 2010

TIME CHANGER - டைம் சேஞ்சர்


இது ஒரு கிறிஸ்டியன் சினிமா



படம் நல்ல விறுவிறுப்போடு எடுத்திருகிறாக்கள் . பத்தொன்பதாம் நூற்றான்டில் ஒரு பைபிள் டீச்சர் ஒரு கிறிஸ்துவ காலேஜ் இடமிருந்து தன்னுடைய புதிய புத்தகத்தின் அங்கீகாரத்திற்காக அந்த கல்லூரியின் போர்டு மெம்பெர்சிடம் தன்னுடைய படைப்பை சமர்பிக்கிறார். ஆனால் அதில் ஒரு மெம்பர் விரிவுரையாளரின் புத்தகத்தை அங்கீகரிக்கவில்லை.மாறாக அந்த விரிவுரையாளரை இருபத்தி ஒன்றாம் நூறாண்டிற்கு தன்னுடைய டைம் மெஷின் மூலம் அனுப்பி இது போன்ற புத்தங்களினால் ஏற்படும் விளைவுகளை பார்க்க சொல்கிறார்.
கிறிஸ்டியன்

Sunday, February 14, 2010

வரவேற்புரை


உங்கள் அனைவருக்கும் கர்த்தரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தில் வாழ்த்துகள்.நான் அனுபவத்தில் அறிந்ததும் அறிய வேண்டும் என்றுநினைகிறவைகளையும் இங்கு உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.மற்றபடி நான் எல்லாம் அறிந்தவன் என்று எண்ணவில்லை.மேலும் நீங்கள் நான் செய்யும் தவறுகளை சுட்டி காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்.
கர்த்தர் தாமே நம்மை ஆசிர்வதிபராக. ஆமென்.
கிறிஸ்டியன்




The Kingdom of Heaven suffereth violence

The Kingdom of Heaven suffereth violence

Followers

About Me

i accepted LordJesusChrist as my saviour and God when i was 16yrs old.